Engal Bharatham | எங்கள் பாரதம்

< 1 minutesread

இந்தியன் என்று சொல்வோம்
அந்த சொல்லில் பெருமிதம் கொள்வோம்
தீங்கற்ற தேசம் படைக்க
நம் கைகளை இணைத்து கொள்வோம்
இது எங்கள் பாரதம்

இந்தியன் என்று சொல்வோம்
அந்த சொல்லில் பெருமிதம் கொள்வோம்
தீங்கற்ற தேசம் படைக்க
நம் கைகளை இணைத்து கொள்வோம்

நம் மொழிகள் வேறாகினும்
நாம் ஒரு தாய் மக்களே
நம் நிறங்கள் வேறாகினும்
நம்மில் வேற்றுமை இல்லையே

எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்

  1. யுத்தங்கள் மாறணும்
    சமாதானம் பிறக்கணும்
    ஜாதி வேற்றுமை இல்லாமல்
    ஒன்றாய் வாழணும்இளைஞர்
    சமுதாயம் இன்றே எழுந்து
    நீதியை நாட்டணும்
    நம் தேசத்தை உயர்த்தணும்
  2. சோம்பலை போக்குவோம்
    நம் வளத்தை பெருக்குவோம்
    நீதி நேர்மையை கடைப்பிடித்து
    ஒழுக்கத்தை நாட்டுவோம்

அறிவியல் அறிஞர்கள் மாபெரும் ஞானிகள்
கொண்ட நம் நாடிது
வளமிக்க பெரும் நாடிது
இறைவன் கொடுத்த தேசத்தை
வளமாய் காத்திடுவோம்
கயவர்கள் கையில் தேசம் போக
துளியும் விடமாட்டோம்

0
117
< 1 minutesread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.