நீரே வழி நீரே சத்தியம் நீரே ஜீவன்
வேறே ஒரு தெய்வம் இல்லை நீரே தேவன்
விண்ணிலும் மண்ணிலும்
மெய் நாமம் உந்தன் நாமம் ஐயா
உமக்கு நிகர் என்றும் நீர் தானைய்யா
- கல்லும் அல்ல மண்ணும் அல்ல
கல்லால் ஓர் சிற்பமல்ல
ஜீவனுள்ள தேவன் என்றால்
நீர் தானைய்யா – 2
ரூபங்கள் உமக்கில்லை
சொருபமும் உமக்கில்லை
ஆவியாய் இருக்கிறீர் ஆண்டவரே – 2
- உண்டானது எல்லாமே உம்மாலே
உண்டானது உம் நாம மகிமைக்கே
உண்டாக்கினீர் – 2
படைப்பு தெய்வமல்ல
பார்ப்பதெல்லாம் தெய்வமல்ல
கர்த்தர் நீர் ஒருவரே கடவுளய்யா – 2
- எல்லாம் வல்ல தெய்வம் நீரே
எல்லையில்லாதவரே
உம்மாலே ஆகாதது ஒன்றுமில்லையே – 2
வானம் உம் சிங்காசனம்
பூமி உந்தன் பாதபடி
நடப்பதெல்லாம் உம் விருப்பப்படி – 2
Aayathamaa Vol-2 | Ravi Bharath | Neerae Vazhi Neerae Sathyam Lyrics In Tamil