Antha Pakkam Ennai | அந்தப்பக்கம் என்னை

1 minuteread

அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள்
இந்தப்பக்கம் என்னை இழுக்கிறார்கள்
மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன்

  1. Sunday Morning என்றால் வேஷமிடும் நேரம்
    நீதிமான்கள் என்று காட்டிக்கொள்ளும் நேரம் நேரம்
    மற்ற நாளில் எல்லாம் பாவம் தலை தூக்கும்
    இஷ்டம் போல வாழ்க்கை வேறு திசை பறந்திடுமே
    மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன்
  2. எந்தன் பக்தி காட்ட Prayer Meeting செல்வேன்
    நோய்கள் பேய்கள் ஓட்ட நீண்ட ஜெபம் செய்வேன் செய்வேன்
    ஆவியின் வரங்கள் அனைத்தும் பெற்றுள்ளேனே
    ஆவியின் கனிகள் என்னவென்று தெரியாதே
    மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன்
  3. ஆலயத்தில் நான் தான் பரிசுத்தத்தின் எல்லை
    Mary Martha கூட என்னைப் போல இல்லை இல்லை
    ஏதோ அவ்வப்போது பாவம் செய்வதுண்டு
    யாரும் அறியாத மாய்மால வாழ்க்கை ஒன்று
    மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன்
  4. காலங்காலமாக Christians நாங்க மாதம்
    தவறாமல் காணிக்கைகள் போடுறோங்க
    மற்றபடி கிறிஸ்து யாரென்று தெரியாதே
    நித்யம் சத்யம் எல்லாம் எனக்கு புரியாதே
    மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன்
  5. மக்கள் என்னை கண்டால் ஸ்தோத்திரம் சொல்வதுண்டு
    நல்ல பிள்ளை என்று Certificate எனக்குண்டு
    உண்மை நிலை என்ன அவர்கள் அறியாரே
    உள்ளுக்குள்ளே நானே அழகான கல்லறையே
    மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன்

Aayathamaa Vol-3 | Ravi Bharath | Antha Pakkam Ennai Lyrics In Tamil

0
120
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.