Neenga Vaanga Sekiram Vaanga | நீங்க வாங்க சீக்கிரம் வாங்க

1 minuteread

நீங்க வாங்க சீக்கிரம் வாங்க – உங்க
இராஜியத்த எதிர்பார்கிறோம் நாங்க – 2

  1. அநியாயம் அதிகமாச்சே
    நியாயம் நீதீ தொலைந்து போச்சே
    வியாதி வறுமை பெருகி பேச்சே
    அன்பும் காணாம போச்சே

நீங்க வந்தாதான் ஒரு முடிவு வரும்
நீங்க வந்தாதான் ஒரு விடிவு வரும்
– நீங்க வாங்க

  1. கடவுள் பயம் குறைந்து போச்சே
    மனசாட்சி மறைந்து போச்சே
    இதயம் முழுசும் இருண்டு போச்சே
    இல்லம் இல்லாம பேச்சே

நீங்க வந்தாதான் மறுவாழ்வு வரும்
நீங்க வந்தாதான் திருவாழ்வு வரும்
– இயேசுவே வாங்க

வறுமை ஒழியணும்
வாழ்வு நிறைவாய் வேண்டும்
வியாதி ஒழியணும்
வையம் நலம் பெற வேண்டும்

சண்டை மறையணும்
நிம்மதி மலர்ந்திட வேண்டும்
தீமை ஒழியணும்
நன்மை நதியாய் ஓடணும்

பாவம் ஒழியணும்
நீதீ நிலைந்திட வேண்டும்
மரணம் மடியணும்
ஜீவன் நிரந்தரம் வேண்டும்
– நீங்க வாங்க

Aayathamaa Vol-7 | Ravi Bharath | Neenga Vaanga Sekiram Vaanga Lyrics in Tamil

0
91
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.