இயேசுவாலே பிடிக்கப்பட்டவன் – அவர்
இரத்தத்தாலே கழுவப்பட்டவன்
எனக்கென்று எதுவுமில்ல
இப்பூமி சொந்தமில்ல
எல்லாமே இயேசு என் இயேசு
எல்லாம் இயேசு இயேசு இயேசு – 2
- பரலோகம் தாய் வீடு
அதைத் தேடி நீ ஓடு
ஒருவரும் அழிந்து போகாமலே
தாயகம் வரவேணும் தப்பாமல் - அந்தகார இருளினின்று
ஆச்சரிய ஒளிக்கழைத்தார்
அழைத்தவர் புண்ணியங்கள் அறிவித்திட
அடிமையை தெரிந்தெடுத்தார் - லாபமான அனைத்தையுமே
நஷ்டமென்று கருதுகின்றேன்
இயேசுவை அறிகின்ற தாகத்தினால்
எல்லாமே இழந்து விட்டேன் - பின்னானவை மறந்தேன்
முன்னானவை நாடினேன்
என் நேசர் தருகின்ற பரிசுக்காக
இலக்கை நோக்கி தொடருகின்றேன் - பாடுகள் அனுபவிப்பேன்
பரலோக தேவனுக்காய்
கிறிஸ்துவின் மகிமை
வெளிப்படும் நாளில்
களிகூர்ந்து மகிடிநந்திருப்பேன்
Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 8 | Yesuvale Pidikkapattavan Avar | இயேசுவாலே பிடிக்கப்பட்டவன் அவர் | Tamil Christian Song Lyrics