எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே
இந்நாளில் உம்சித்தம் போல் நடத்திச் செல்லுமையா
ஆவியானவரே ஆவியானவரே
பரிசுத்த ஆவியானவரே – 2
- எப்படி நான் ஜெபிக்க வேண்டும்
எதற்காக ஜெபிக்க வேண்டும்
கற்றுத்தாரும் ஆவியானவரே – 2
வேதவசனம் புரிந்துகொண்டு
விளக்கங்களை அறிந்திட
வெளிச்சம் தாரும் ஆவியானவரே – 2 - கவலை கண்ணீர் மறக்கணும்
கர்த்தரையே நோக்கணும்
கற்றுத் தாரும் ஆவியானவரே – 2
செய்த நன்மை நினைக்கணும்
நன்றியோடு துதிக்கணும்
சொல்லித் தாரும் ஆவியானவரே – 2 - எங்கு செல்ல வேண்டும்
என்ன சொல்ல வேண்டும்
வழிநடத்தும் ஆவியானவரே – 2
உம்விருப்பம் இல்லாத
இடங்களுக்கு செல்லாமல்
தடுத்து றிறுத்தும் ஆவியானவரே – 2 - எதிரிகளின் சூழ்ச்சிகள்
சாத்தானின் சூழ்ச்சிகள்
எதிர்த்து நிற்க பெலன் வேண்டுமே – 2
உடல் சோர்வுகள் அசதிகள்
பெலவீனங்கள் நீங்கி
உற்சாகத்தால் நிரம்ப வேண்டுமே – 2
Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 13 | Engalukule Vasam Seiyum | எங்களுக்குள்ளே வாசம் செய்யும் | Tamil Christian Song Lyrics