Jeeva Thanneere Aaviyanavare | ஜீவத்தண்ணீரே ஆவியானவரே

1 minuteread

ஜீவத்தண்ணீரே ஆவியானவரே
வற்றாத நதியாக வாரும் போதகரே
வாருமையா போதகரே – 2
வற்றாத ஜீவ நதியாக – 2

  1. கணுக்கால் அளவு போதாதையா
    முழங்கால் அளவு போதாதையா
    நீந்தி நீந்தி மூழ்கணுமே – 2
    மிதந்து மிதந்து மகிழணுமே – 2
  2. போகும் இடமெல்லாம் ஆரோக்கியமே
    பாயும் இடமெல்லாம் பரிசுத்தமே – 2
    சேருமிடமெல்லாம் ஆறுதலே – 2
    செல்லமிடமெல்லாம் செழிப்புதானே – 2
  3. கோடி கோடி மீனவர் கூட்டம்
    ஓடி ஓடி வலை வீசணும் – 2
    பாடி பாடி மீன் பிடிக்கணும் – 2
    பரலோக தேவனுக்கு ஆள் சேர்க்கணும் – 2
  4. கரையோர மரங்கள் ஏராளமாய்
    கனி தர வேண்டும் தாராளமாய் – 2
    இலைகள் எல்லாம் மருந்தாகணும் – 2
    கனிகள் எல்லாம் உணவாகணும் – 2

Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 14 | Jeeva Thanneere Aaviyanavare | ஜீவத்தண்ணீரே ஆவியானவரே | Tamil Christian Song Lyrics

0
116
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.