நல்லதையே நான் சொல்லவும் செய்யவும்
உள்ளத்தை இன்று உறுதிப்படுத்தும் ஐயா
- ஆதிமுதல் என்னைத் தெரிந்துகொண்டீர்
அப்பாவை நம்பி மீட்படைய
ஆவியினாலே தூய்மையாக்கி
அதிசயமாய் என்னை நடத்துகிறீர்
அப்பா நன்றி நன்றி – 2
- பாவங்கள் செய்து மரித்துப் போயிருந்தேன்
கிறிஸ்துவோடே கூட உயிர்த்தெழ செய்தீர்
கிருபையினாலே என்னை இரட்சித்தீர்
உன்னதங்களிலே உட்காரச் செய்தீர் - ஆண்டவர் கிறிஸ்துவின் மகிமைடைந்திட
அழைத்தீரே நன்றி ஐயா
ஆறுதல் தந்தீர்; அன்பு கூர்ந்தீர்
பரலோகம் எதிர்நோக்கி வாழச்செய்தீர் - துதிக்கும் மகிமைக்கும் பாத்திரரே
பெருமையும் புகழ்ச்சியும் உமக்குத்தானே
ஞானமும் நன்றியும் வல்லமையும்
என்றென்றும் உமக்கே உரித்தாகட்டும் - ஆவியினாலே பெலப்படணும்
அன்பிலே வேரூன்றி திடம் பெறணும்
அப்பாவின் அன்பின் அகலம் ஆழம்
அறியும் ஆற்றல் நான் பெறணும் - எப்பொழுதும் நான் மகிழ்வுடன் இருந்து
இடைவிடாமல் ஜெபம் செய்யணும்
என்ன நேர்ந்தாலும் நன்றி சொல்லி
இயேசப்பா திருச்சித்தம் நிறைவேற்றணும்
Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 19 | Nallathaiye Naan Sollavum | நல்லதையே நான் சொல்லவும் | Tamil Christian Song Lyrics