
Kan Chimittum Natchathiram – Tamil Christmas Songs and Lyrics
கண் சிமிட்டும் நட்சத்திரம்
என்றும் கண்டிடாத நட்சத்திரம்
வழியாக வந்தவரைக் காணவே
வழி காட்டி செல்லும் நட்சத்திரம்
1. ஞானியர் கண்டு அதிசயித்தார் – யூத
இராஜன் பிறந்தார் என்றார்
ஏரோதின் மாளிகை சென்றடைந்தார் – அங்கு
ஏமாற்றம் அடைந்தார்
தாவீதின் ஊரின் சத்திரத்தில் அத்
தாரகை நின்றிடவே
தாழ்மையின் கோலத்தில் மன்னவனை
மாட்டுத் தொழுவினில் கண்டனரே
2. பொன் வெள்ளைப் போளம் தூபம் தந்து
தூயப் பாலனைப் பணிந்தனரே
பரிசுத்த இராஜனைப் பணிந்து நின்று
மா பாக்கியம் அடைந்தனரே
உலகெல்லாம் இயேசுவைக் கண்டிடவே
வழி காட்டுவோம் வாருங்கள்
இயேசுவுக்காய் பிரகாசிப்போம்
நல் பாக்கியம் பெற்றிடுவோம்