Anaadhaigalin Dheivamay Aadharavatrorin | அனாதைகளின் தெய்வமே ஆதரவற்றோரின்

1 minuteread

அனாதைகளின் தெய்வமே
ஆதரவற்றோரின் தெய்வமே
சகாயர் இல்லாதவர்க்கு சகாயரே
தகப்பன் இல்லாதவர்க்கு நீரே தகப்பனே

  1. எளியவரை உயர்த்தினீர் சிறியவனை எழுப்பினீர்
    பிரபுக்கள் நடுவில் அமர்த்தினீர் தகப்பனே
    பிள்ளைகள் இல்லா மலடியை
    பிள்ளைத்தாய்ச்சியாய் மாற்றினீர்
    நிந்தைகள் எல்லாம் நிவிர்த்தி செய்யும் தகப்பனே
  2. சத்துவம் இல்லாத மனிதருக்கு சத்துவத்தை அளிக்கிறீர்
    பெலத்தினாலே நிரப்பினீர் தகப்பனே
    திக்கற்று நிற்கும் விதவையின்
    விண்ணப்பங்களை கேட்கிறீர்
  3. எல்லைகள் எங்கும் தொல்லைகள் நீக்கும் தகப்பனே
    ஏழையினை நினைக்கிறீர் அழுதிடும்போது அணைக்கிறீர்
    இடுக்கண் அனைத்தும் அகற்றினீர் தகப்பனே
    உடைந்து சிதறிய மனதினை உள்ளங்கையிலே ஏந்தினீர்
    அதன் காயங்கள் ஆற்றும் அன்றாடம் தேற்றும் தகப்பனே

Aayathamaa Vol-4 | Ravi Bharath | Anaadhaigalin Dheivamay Aadharavatrorin Lyrics In Tamil

0
73
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.