Azhaithavarae Azhaithavarae | அழைத்தவரே அழைத்தவரே

< 1 minutesread

அழைத்தவரே அழைத்தவரே
என் ஊழியத்தின் ஆதாரமே – 2

எத்தனை நிந்தைகள் எத்தனை தேவைகள்
எனை சூழநின்றாலும் உம்மை பார்க்கின்றேன் – 2
உத்தம ஊழியன் என்று நீர் சொல்லிடும்
ஒரு வார்த்தை கேட்டிட உண்மையாய் ஒடுகிறேன் – 2

  1. வீணான புகழ்ச்சிகள் எனக்கிங்கு வேண்டாமே
    பதவிகள் பெருமைகள் ஒரு நாளும் வேண்டாமே – 2
    ஊழியப் பாதையில் ஒன்று மட்டும் போதுமே
    அப்பா உன் கால்களின் சுவடுகள் போதுமே – 2 – அழைத்தவரே
  2. விமர்சன உதடுகள் மனம்சோர வைத்தாலும்
    மலைபோன்ற தேவைகள் சபை நடுவில் நின்றாலும்
    அழைத்தவர் என்றுமே விலகுவதில்லையே
    கிருபையின் வரங்களும் குறைவதும் இல்லையே – 2 – அழைத்தவரே
0
186
< 1 minutesread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.