தாசனாகிய யாக்கோபே
பயப்படாதே திகையாதே
- உனக்கு முன்பாக நான் செல்வேன்
வழிகள் செவ்வையாக்குவேன்
இதுவரையிலும் காத்திட்டேன்
இனியும் காத்திடுவேன்
மறைவிலிருக்கும் பொக்கிஷங்களை
உனக்கு தந்திடுவேன்
- வலக்கரத்தினால் தாங்கிடுவேன்
பெலனை கொடுத்திடுவேன்
வறண்ட நிலத்தின் மேல்
ஆறுகளை ஓடச்செய்வேன்
உன் மேல் ஆவியும்
ஆசீர்வாதமும் ஊற்றிடுவேன்
- தாயைப் போல தேற்றிடுவேன்
தந்தை போல் அணைத்திடுவேன்
கால்கள் கல்லில் இடராமல்
கருத்தாய் காத்திடுவேன்
நினைத்திடாத அளவிற்கு
நான் உன்னை உயர்த்திடுவேன்
- ஆறுகளை நீ கடக்கையிலே
உன்னோடு நான் இருப்பேன்
அக்கினி ஜுவாலை உன்னைப்
பற்றாமல் காத்துக் கொள்வேன்
உனக்கு எதிராய் எழும்புவோரை
நானே சிதறடிப்பேன்
Aayathamaa Vol-2 | Ravi Bharath | Dhasanagiya Yakobe Bayapadadhe Lyrics In Tamil