Ellame Mudinthathu Endru | எல்லாமே முடிந்ததென்று

< 1 minutesread

எல்லாமே முடிந்ததென்று
என்னைப் பார்த்து இகழ்ந்தனர்
இனியென்றும் எழும்புவதில்லை
என்று சொல்லி நகைத்தனர்

ஆனாலும் நீங்க என்னை
கண்டவிதம் பெரியது
என் உயர்வின் பெருமையெல்லாம்
உம் ஒருவருக்குரியதே

நீர் மட்டும் பெருகனும்
நீர் மட்டும் இயேசுவே

  1. உடைக்கப்பட்ட பாத்திரமானேன்
    உபயோக மற்றிருந்தேன்
    ஒன்றுக்கும் உதவுவதில்லை
    என்று சொல்லி ஒதுக்கப்பட்டேன்
  2. குயவனே உந்தன் கரம்
    மீண்டும் என்னை வனைந்தது
    விழுந்து போன இடங்களிலெல்லாம்
    என் தலையை உயர்த்தியதே
0
113
< 1 minutesread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.