Isravelin Thuthigalil Vasam | இஸ்ரவேலின் துதிகளில் வாசம்

< 1 minutesread

இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்யும்
எங்கள் தேவன் நீர் பரிசுத்தரே

ஓஹோ வாக்குகள்
பல தந்து அழைத்துவந்தீர்
ஒரு தந்தை போல
எம்மை தூக்கி சுமந்தீர்

இனி நீர் மாத்ரமே எங்கள் சொந்தமானீர்
உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
உம் நாமத்தினால் என்றும் ஜெயமெடுப்போம்

  1. எதிர்காலம் இல்லாமல் ஏங்கி நின்றோம்
    காலத்தைப் படைத்தவர் தேடிவந்தீர்
    சிறையிருப்பை மாற்றி தந்தீர்
    சிறுமையின் ஜனம் எம்மை உயர்த்திவைத்தீர்
  2. செங்கடலைக் கண்டு சோர்ந்துபோனோம்
    யோர்தானின் நிலை கண்டு அஞ்சி நின்றோம்
    பயப்படாதே முன் செல்லுகிறேன்
    என்றுரைத்து எம்மை நடத்திவந்தீர்
  3. எதிரியின் படை எம்மை சூழும்போது
    ஓங்கிய புயங் கொண்டு யுத்தம் செய்தீர்
    பாடச் செய்தீர் துதிக்கச் செய்தீர்
    எரிகோவின் மதில்களை இடிக்கச் செய்தீர்
0
125
< 1 minutesread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.