கலங்கின நேரங்களில்
கைதூக்கி எடுப்பவரே
கண்ணீரின் பள்ளத்தாக்கில்
என்னோடு இருப்பவரே
உறவுகள் மறந்தாலும்
நீர் என்னை மறப்பதில்லை
காலங்கள் மாறினாலும்
நீர் மட்டும் மாறவில்லை
நீங்க தாம்பா என் நம்பிக்கை
உம்மையன்றி வேறு துணையில்லை
- தேவைகள் ஆயிரம்
இன்னும் இருப்பினும்
சோர்ந்துபோவதில்லை
என்னோடு நீர் உண்டு
தேவையைக் காட்டிலும்
பெரியவர் நீரல்லோ
நினைப்பதைப் பார்க்கிலும்
செய்பவர் நீரல்லோ
- மனிதனின் தூஷணையில்
மனமடிவடைவதில்லை
நீர் எந்தன் பக்கமுண்டு
தோல்விகள் எனக்கில்லை
நாவுகள் எனக்கெதிராய்
சாட்சிகள் சொன்னாலும்
வாதாட நீர் உண்டு
ஒருபோதும் கலக்கமில்லை