Muthirai Muthirai Yezhu Muthirai | முத்திரை முத்திரை ஏழு முத்திரை

1 minuteread

முத்திரை முத்திரை ஏழு முத்திரை
இவைகளை திறப்பது யாரது
இயேசு கிறிஸ்து தானது

  1. வெள்ளை குதிரையில் ஒருவன்
    அந்தி கிறிஸ்து அவன்
    ஜெயிக்க வரும் ஒருவன்
    ஜனங்களை வஞ்சிப்பவன்

போலியாய் பலர் வந்துபோவார்
எச்சரிக்கை வேண்டும்
வேதம் சொல்வதை நன்கு அறிய வேண்டும்

இது முத்திரை முதல் முத்திரை

  1. சிவப்பு குதிரையில் ஒருவன்
    அதிகாரம் கொண்டவன்
    பட்டயம் கையில் கொண்டவன்
    பலரை கொல்லும் ஒருவன்

யுத்த செய்திகள் கேட்கும்போது
எச்சரிக்கை வேண்டும்
இவைகளெல்லாம் சம்பவிக்க வேண்டும்

இந்த முத்திரை இரண்டாவது

  1. கறுப்பு குதிரையில் சவாரி
    செய்து ஒருவன் வருகின்றான்
    தராசை கையில் ஏந்திக்கொண்டு

அவனே வருகின்றான்
பூமி எங்கும் பஞ்சம் உண்டாகும்
பட்டினியாலே துன்பம் உண்டாகும்

இந்த முத்திரை மூன்றாவது

  1. நாலாம் முத்திரை உடைத்தபோது
    மங்கின நிறமுள்ள குதிரை
    மரணம் என்பது அவனது நாமம்
    மேற்கொள்ளுமே பலரை

பஞ்சத்தாலும், போரினாலும்,
பூமி அதிர்ந்ததாலும்,
கொள்ளை நோயின் பிடியினாலும்
மரணம் மேற்கொள்ளும்
மனிதனை மரணம் மேற்கொள்ளும்

முத்திரை முத்திரை ஏழு முத்திரை

  1. ஐந்தாம் முத்திரை உடைத்தபோது
    பலிபீடத்தின் கீழே
    ரத்த சாட்சியாய் மாண்ட மாந்தரின்
    விண்ணப்பம் சென்றது மேலே

தேவனை தொழுதிடும் ஆத்துமாக்களை
உலகம் பகைத்திடும்
கர்த்தரே தேவன் என்று போற்றினால்
கொலையும் செய்திடும்

  1. ஆறாம் முத்திரை உடைத்தபோது
    பூமியும் அதிர்ந்ததே
    சூரியன் கறுத்து சந்திரன் சிவந்து
    விண்மீண் விழுந்ததே

மனுஷ குமாரனின் அடையாளங்கள்
விண்ணில் தெரியுது பார்
மன்னாதி மன்னன் வருவதை பார்த்து
மனிதர் புலம்பிடுவார்
பூமியின் மனிதர் புலம்பிடுவார்

  1. இறுதி முத்திரை உடைந்தது
    பரலோகில் அமைதி நிலவியது
    பூமியின் நியாயத்தீர்ப்புக்காய்
    ஆயத்தமாகும் ஒரு அமைதியது

Aayathamaa Vol-2 | Ravi Bharath | Muthirai Muthirai Yezhu Muthirai Lyrics In Tamil

0
72
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.