- வானை முட்டும் மரங்கள் மீது
சின்னப் பறவை அமர்ந்திருந்து
தேவன் மேல் ஓர் பாட்டுப்பாடி
என்னை நிற்கச் செய்தது
சிந்திக்கவும் வைத்தது - யானைகளின் கூட்டம் ஒன்று
ஓடை ஒன்றின் ஓரம் வந்து
நீளக்கையால் நீரை அள்ளி
மேலே நோக்கி வழங்கிற்று
‘நன்றி’ வழங்கிற்று - பறவைகளும் மிருகங்களும்
மறவாதும்மை துதிக்கும் நேரம்
பாவி நானும் பணிந்து வந்தேன்
சிலுவை மரத்தின் நிழலடியில்
‘இயேசுவே’ என்றேன் - எந்தன் சிருஷ்டி யாவற்றிலும்
மனிதர்தான் என் மனதில் பிரியம்
உன்னைத் தாழ்த்தி நீ வந்ததால்
என்னை உனக்குத் தருகிறேன்
‘எழுந்திரு’ என்றார் - உலகில் ஐந்து கண்டம் உண்டு
கோடிக் கோடி மனிதர் உண்டு
யாவருக்கும் என்னைக் கொடு
உன்னிடம் நானும் வருவேன்
‘போவாம் வா’ என்றார் - அன்று பிறந்த எங்கள் பணி
இன்று வரை தொடர்கின்றது
நானும் எந்தன் இயேசுவுடன்
எல்லா திக்கும் செல்கின்றேன்
எல்லோருக்கும் சொல்கின்றேன்
Dr.N. Emil Jebasingh | Vaannaimuttum Marangal Meethu Lyrics in Tamil | Tamil Christian Song Lyrics