Aesaya theerkan androru naal – Tamil Christmas Songs and Lyrics
ஏசாயா தீர்க்கன் அன்றொரு நாள் தரிசனம் கண்டான்
தேவ மைந்தன் கன்னி மரியின் மடியில் தோன்றுவார் – என்று (2)
- கடும் குளிரில் மேய்ப்பர் மந்தை போர்த்தி நிற்கையில்
தேவ தூதர் வானில் தோன்றி வாழ்த்து கூறினார் (2)
எல்லா ஜனத்திற்கும் மிகுந்த சந்தோஷம் தரும்
நற்செய்தியை கூற இங்கு வந்தேன் என்றாரே (2) - தாவீதின் குமரன் இயேசு பெத்லஹேமிலே
மாட்டுத் தொழுவில் ஏழ்மையாக அவதரித்தாரே (2)
கர்த்தராகிய கிறிஸ்து உலக ரட்சகர்
பாலனாக உன்னில் தோன்ற இடம் தருவாயா (2) - பாவத்திலே மாண்டு போகும் மண்ணின் மைந்தர்க்காய்
விண்ணின் வேந்தன் தன்னை இன்று உலகில் தந்தாரே (2)
சிலுவை மரத்திலே மரித்து ஜீவன் ஈந்தாரே
உயிர்த்தெழுந்த இயேசுவை நீ இன்று ஏற்றுக்கொள் (2)
Aesaya theerkan androru naal – Tamil Christmas Song Lyrics in English
Aesaya theerkan androru naal tharisanam kandan
Deva maindhan kanni mariyin madiyil thondruvar – endru (2)
- Kadum kuliril meipar manthai porthi nirkkaiyil
Deva thoothar vaanil thondri vaalthu koorinar (2)
Ella janathirkum migundha santhosham tharum
Narchcheithiyai koora ingu vanthaen endrarae (2) - Daavithin kumaran Yesu Bethlahemilae
Maatu tholuvil yelmaiyaga avatharitharae (2)
Kartharagiya Christhu ulaga ratchagar
Paalanaga unnil thondra idam tharuvaya (2) - Paavathilae mandu pogum mannin maintharkai
Vinnin vaendhan thannai indru ulagil thandharae (2)
Siluvai marathilae marithu jeevan iindharae
Uyirthelundha Yesuvai nee indru etrukol (2)