Akinyiin Theva Irangidumae Song Lyrics in Tamil – Lyrics and Tune: Pastor.Reegan Dhanasekar – Album: Thuniayalare
அக்கினியின் தேவா இறங்கிடுமே
வேண்டாத அனைத்தையும் எரித்திடுமே -2
நான் உமக்காக எழும்பிடணும்
நான் உமக்காக ஜொலித்திடணும்
சுத்த பொன்னாக விளங்கிடவே -2
ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா – 2
1. முட்செடி நடுவினிலே அந்த
மோசேயோடு பேசினீரே -2
சரீரம் அதையும் ஆத்துமாவையும்
புடமிடும் தேவனல்லவா ஆ… -2
2. பெந்தேகோஸ்தே நாளினிலே
அந்தமக்களோடு பேசினீரே -2
ஆவியின் வரமும் அந்நியபாஷையும்
தருகின்ற தேவனல்லவா ஆ… -2
3. உம் வசனம் தியானிக்கையில்
அக்கினியாய் எரிபவரே -2
சரீரம் அதையும் ஆத்துமாவையும்
புடமிடும் தேவனல்லவா ஆ… -2