அன்புள்ள இயேசையா
உம் பிள்ளை நான் ஐயா
ஆனந்த ஒளிபிறக்கும்
வாழ்வெல்லாம் வழிதிறக்கும் – 2
- காடு மேடு ஓடிய ஆடு
என்று என்னை வெறுத்திடவில்லை – 2
நாடி என்னைத் தேடிய தயவல்லவோ
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் – அன்புள்ள - பகலில் மேகம் இரவில் ஜோதி
பசிக்கு மன்னா ருசிக்கவும் அன்பு – 2
நாடி என்னைத் தேடிய தயவல்லவோ
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் – அன்புள்ள - தாகம் தீர ஜீவ தண்ணீர்
உள்ளங்கையில் என்னையும் கண்டீர் – 2
நாடி என்னைத் தேடிய தயவல்லவோ
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் – அன்புள்ள
Dr.N. Emil Jebasingh | Anbulla Yesaiya Um Lyrics in Tamil | Tamil Christian Song Lyrics