அரியதோர் செய்தி பெற்றோம்
பெரியதோர் பொறுப்பும் ஏற்றோம்
தெரிந்தவர் கூறாவிட்டால்
தெரியாதோர் அறிவதெங்கே?
அங்கே ஆயிரம்
அறுவடை ஆயிரம்
இங்கே இயேசுவே
அடியவர் ஆயத்தம்
- ஒன்றும் இல்லார் அதிகம் உண்டு
உண்டு களிக்க காலம் இல்லை
பங்குகளை அனுப்பவேண்டும்
எங்கும் மகிழ்ச்சி காணவேண்டும் – அங்கே - கண்ணீரோடு விதைத்த விதைகள்
நல்ல நிலத்தில் விழுந்த விதைகள்
சிறுக விதைத்தால் சிறுக அறுப்போம்
பெருக விதைத்தால் பெருக அறுப்போம் – அங்கே - ஆதி சபைகள் கண்ட வளர்ச்சி
அடியார் பணியில் காணச் செய்யும்
அப்போஸ்தலர்கள் பெற்ற முதிர்ச்சி
அடியேன் வாழ்வில் விளங்கச் செய்யும் – அங்கே
Dr.N. Emil Jebasingh | Ariyathour Seithi Pettrom Lyrics in Tamil | Tamil Christian Song Lyrics