Avar Enthan Sangeethamanavar | அவர் எந்தன் சங்கீதமானவர்

< 1 minutesread
  • Home
  • /
  • Knowledgebase
  • /
  • Avar Enthan Sangeethamanavar | அவர் எந்தன் சங்கீதமானவர்

அவர் எந்தன் சங்கீதமானவர்
பெலமுள்ள கோட்டையுமாம்
ஜீவனின் அதிபதியான அவரை
ஜீவிய காலமெல்லாம் வாழ்த்திடுவோம்

  1. துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
    தூதர் கணங்கள் போற்றும் தேவன் அவரே
    வேண்டிடும் பக்தர்களின் குறைகள் கேட்கும்
    திக்கற்ற பிள்ளைகளின் தேவன் அவரே
  2. இரண்டு மூன்று பேர் எந்தன் நாமத்தினால்
    இருதயம் ஒருமித்தால் அவர் நடுவில்
    இருப்பேன் என்றவர் நமது தேவன்
    இரு கரம் கூப்பி என்றும் வாழ்த்திடுவோம்
  3. வானவர் கிறிஸ்தேசு நாமம் அதை
    வாழ்நாள் முழுவதும் வாழ்த்திடுவோம்
    வருகையில் அவரோடு இணைந்து என்றும்
    வணங்குவோம் வாழ்த்துவோம் போற்றிடுவோம்
0
94
< 1 minutesread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.