Balamaaga Roobikkapatta | பலமாக ரூபிக்கப்பட்ட

1 minuteread

பலமாக ரூபிக்கப்பட்ட தேவ குமாரன் இயேசுவே
எங்கள் கிரீடங்கள் யாவையும்
கழற்றுகின்றோம்
உம் மகிமையின் பாதத்தில்
கிடத்துகின்றோம்

உம்மை மென்மேலும் உயர்த்துகின்றோம்
உம்முன் நெடுஞ்சாண்கிடையாகின்றோம்

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
பரிசுத்தர் முற்றிலும் பரிசுத்தரே
எங்கள் இயேசு முற்றிலும் பரிசுத்தரே

  1. ஜீவனின் மார்க்கத்தை உம்
    மாம்சத்தின் திரைவழி தந்தவரே
    திரையினுள் பிரவேசிக்க உம்
    இரத்தத்தால் தைரியம் தந்தவரே
    தேவனின் வீட்டிற்கு அதிகாரியே
    புது உடன்படிக்கையின் மத்தியஸ்தரே
    நீர் மென்மேலும் பரிசுத்தரே
  2. எதிரான கையெழுத்தை
    உம் இரத்தத்தினாலே குலைத்தவரே
    ஆக்கினை தீர்ப்பினை
    என்னை விட்டு எடுத்தவரே
    தேவனின் வீட்டிற்கு அதிகாரியே
    புது உடன்படிக்கையின் மத்தியஸ்தரே
    நீர் மென்மேலும் பரிசுத்தரே

Balamaaga Roobikkapatta Lyrics In Tamil

0
110
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.