Balibeedathil Ennai Paranae | பலிபீடத்தில் என்னைப் பரனே

< 1 minutesread
  • Home
  • /
  • Knowledgebase
  • /
  • Balibeedathil Ennai Paranae | பலிபீடத்தில் என்னைப் பரனே
  1. பலிபீடத்தில் என்னைப் பரனே
    படைக்கிறேன் இந்த வேளை
    அடியேனை திருச்சித்தம் போல
    ஆண்டு நடத்திடுமே

கல்வாரியின் அன்பினையே
கண்டு விரைந்தோடி வந்தேன்
கழுவும் உம் திரு ரத்தத்தாலே
கறை நீங்க இருதயத்தை

  1. நீரன்றி என்னாலே பாரில்
    ஏதும் நான் செய்திட இயலேன்
    சேர்ப்பீரே வழுவாது என்னை
    காத்து உமக்காய் நிறுத்தி
  2. ஆவியோடாத்மா சரீரம்
    அன்பரே உமக்கென்றும் தந்தேன்
    ஆலயமாக்கியே இப்போ
    ஆசீர்வதித்தருளும்
  3. சுயம் என்னில் சாம்பலாய் மாற
    சுத்தாவியே அனல் முட்டும்
    ஜெயம் பெற்று மாமிசம் சாக
    தேவா அருள் செய்குவீர்
  4. பொன்னையும் பொருளையும் விரும்பேன்
    மண்ணின் வாழ்வையும் வெறுத்தேன்
    மன்னவன் இயேசுவின் சாயல்
    இந் நிலத்தே கண்டதால்
0
56
< 1 minutesread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.