தேவ உலகின் வேந்தரே
தேவையுள்ள இடம் வந்தீரோ
ஏழையைப் பார்த்திட வேளையும் வந்ததோ
பாலைவனம் இனி சோலையோ – தேவ
- கண்ணாடி மாளிகை விட்டோடிப் பீடிகை
மட்டாக வந்தவா எங்கள் பாலா
கண்ணீர் சொரியும் மண்ணின் மடியில்
குடிகொள்ள எண்ணமோ, இயேசுபாலா – (2) – தேவ - பெத்லேகேம் ஊரினில், சத்திரம் ஒன்றினில்
நட்சத்திரம் வந்து நிற்பதேன்?
ராஜாதி ராஜன், கர்த்தாதி கர்த்தன்
மானிட வடிவாய்ப் பிறந்ததால் – (2) – தேவ
Dr.N. Emil Jebasingh | Deva Ulagin Vendharae Lyrics in Tamil | Tamil Christian Song Lyrics