En Devanae Endevanae Neer Alaikum Song Lyrics in Tamil – Lyrics and Tune: Pastor.Reegan Dhanasekar – Album: Thuniayalare
என் தேவனே என் தேவனே
நீர் அழைக்கும் குரல் என் காதில் கேட்கும் -2
தரைமட்டும் நான் தாழ்ந்தாலும்
அலைந்து என் தேகம் வாடினாலும் -2
என் உயிரின் நாடி நின்றாலும்
என் சுவாசம் உம்மில் கலந்திடுமே -2
1. வியாகுல பெருமூச்சு என்னில் நின்று ஓய்ந்தாலும்
வேர்வையின் பெரும் துளிகள்
என்னில் உதிரமானாலும்-2
வேதனையால் முள்முடிகள்
என் வாழ்வில் சூடினாலும்
உம்மை தேடும் பணி என் வாழ்வில்
என்றும் தொடர்ந்திடுமே
2. கண்ணீரை தினம் வடித்து
என்னில் ஆராய் ஓடினாலும்
சோதனை பெருகியே நான் கரைந்துபோனாலும் -2
பெலன் இன்றி ஒடுங்கியே
நான் மரித்துப்போனாலும்
உம்மை பாடும் பணி என்
வாழ்வில் என்றும் மாறாது -2
3. எப்பக்கம் நெருக்கப்பட்டு நான்
நிம்மதி இழந்தாலும்
என் சோக சுமைகளினால் நான்
கலங்கி நின்றாலும் -2
என் வாழ்விலே எல்லை எங்கும்
பாடுகள் சூழ்ந்தாலும்
உம்மில் நிலைத்திடுவேன்
என்றும் துதித்திடுவேன் -2
என் ஜீவ நாளெல்லாம்