En Ullil Varum Yesuvae | என் உள்ளில் வாரும், இயேசுவே

1 minuteread

1.என் உள்ளில் வாரும், இயேசுவே வாரும்
இன்றே நன்று செய்ய வாரும்!
வெம்புண்போல் வெடித்து
நாறிக்கிடக்கும் நெஞ்சை ஆற்றவே வாரும்!

தேவனே, இராஜாவே இராஜாவாகவே வாரும் – (2)
என் உள்ளம் இன்றே வாரும்

2.முன் காலம் எல்லாம் ஒன்றும் செய்யாது
பாவி நானே கெட்டலைந்தேன்
காலம் சிறிதே கடமை பெரிதே
கருத்தூட்டும் இரட்சகனே – தேவனே

3.மேகங்கள் சூழ கல்லறை திறக்க
கர்த்தா நீர் வரும் அன்று
ஐயோ என்றலறி மலை குகை நோக்கி
ஓடாது காரும் என்னையே! – தேவனே

4.என் உடல், சக்தி, கல்வி, செல்வம், சுகம்
காணிக்கை, ஏற்றருளும்!
உள்ளம் உடைந்து பாதம் விழும்
இந்தப் பாவியைப் பொறுத்தருளும்! – தேவனே

Dr.N. Emil Jebasingh | En Ullil Varum Yesuvae Lyrics in Tamil | Tamil Christian Song Lyrics

0
86
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.