Entha Kalathilum Entha Nerathilum | எந்த காலத்திலும் எந்த நேரத்திலும்

< 1 minutesread
  • Home
  • /
  • Knowledgebase
  • /
  • Entha Kalathilum Entha Nerathilum | எந்த காலத்திலும் எந்த நேரத்திலும்

எந்த காலத்திலும் எந்த நேரத்திலும்
நன்றியால் உம்மை நான் துதிப்பேன்
இயேசுவே உம்மை நான் துதிப்பேன், துதிப்பேன்

எந்த வேளையிலும் துதிப்பேன்

  1. ஆதியிம் நீரே அந்தமும் நீரே
    ஜோதியும் நீரே என் சொந்தமும் நீரே
  2. தாய் தந்தை நீரே தாதியும் நீரே
    தாபரம் நீரே என் தாரகம் நீரே
  3. வாழ்விலும் நீரே தாழ்விலும் நீரே
    வாதையில் நீரே என் பாதையில் நீரே
  4. தேவனும் நீரே என் ஜீவனும் நீரே
    ராஜ ராஜனும் என் சர்வமும் நீரே
  5. வானிலும் நீரே பூவிலும் நீரே
    ஆழியில் நீரே என் ஆபத்தில் நீரே
  6. துன்ப நேரத்தில் இன்பமும் நீரே
    இன்னல் வேளையில் என் மாறிடா நேசர்
0
9
< 1 minutesread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.