Enthan Navil Pudhu Pattu|எந்தன் நாவில் புதுப்பாட்டு

1 minuteread
  • Home
  • /
  • Knowledgebase
  • /
  • Enthan Navil Pudhu Pattu|எந்தன் நாவில் புதுப்பாட்டு

எந்தன் நாவில் புதுப்பாட்டு
எந்தன் இயேசு தருகிறார்
ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான் பாடுவேன்
உயிருள்ள நாள் வரையில் – அல்லேலூயா

  1. பாவ இருள் என்னை வந்து சூழ்ந்து கொள்கையில்
    தேவனவர் தீபமாய் என்னைத் தேற்றினார்

2. வாதை நோயும் வந்த போது வேண்டல் கேட்டிட்டார்
பாதைக் காட்டி துன்பமெல்லாம் நீக்கி மீட்டிட்டார்

3. சேற்றில் வீழ்ந்த என்னையவர் தூக்கியெடுத்தார்
நாற்றமெல்லாம் ஜீவரத்தம் கொண்டு மாற்றினார்

4. தந்தை தாயும் நண்பருற்றார் யாவுமாயினார்
நிந்தைதாங்கி எங்குமவர் மேன்மை சொல்லுவேன்

5. இவ்வுலகபாடு என்னை என்ன செய்திடும்
அவ்வுலக வாழ்வைக் காண காத்திருக்கிறேன்

0
4
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.