இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே
வாசஞ் செய்கிறாரே
- தேவன் தாபரிக்கும் ஸ்தலமே
தம் ஜனத்தாரின் மத்தியிலாம்
தேவன் தாம் அவர்கள் தேவனாயிருந்தே
கண்ணீர் யாவையும் துடைக்கிறாரே
2. தேவ ஆலயமும் அவரே
தூய ஒளிவிளக்கும் அவரே
ஜீவனாலே தம் ஜனங்களின் தாகம் தீர்க்கும்
சுத்த ஜீவ நதியும் அவரே
3. மகிமை நிறைப்பூரணமே
மகா பரிசுத்த ஸ்தலமதுவே
என்றும் துதியுடனே அதன் வாசல் உள்ளே
எங்கள் பாதங்கள் நிற்கிறதே
4. சீயேனே உன் வாசல்களை
ஜீவ தேவனே நேசிக்கிறார்
சீர்மிகுந்திடு மிச் சுவிசேஷந்தனை
கூறி உயர்த்திடுவோம் உமையே
5. முன்னோடியாய் இயேசு பரன்
மூலைக்கல்லாகி சீயோனிலே
வாசஞ்செய்திடும் உன்னத சிகரமதை
வாஞ்சையோடு நாம் நாடிடுவோம்