Immanuel Immanuel Endrendrum | இம்மானுவேல் இம்மானுவேல் என்றென்றும்

1 minuteread

Immanuel Immanuel Endrendrum – Tamil Christmas Song Lyrics

இம்மானுவேல் இம்மானுவேல்
என்றென்றும் நம்மோடு இருப்பவரே

இம்மானுவேல் இம்மானுவேல்
மண்ணினில் இன்று பிறந்தார்
இம்மானுவேல் இம்மானுவேல்
மண்ணினில் இன்று பிறந்தார்

அகமகிழ்வோமே அகமகிழ்வோமே
நம்மை மீட்கும் தேவன் பிறந்தார்
அகமகிழ்வோமே அகமகிழ்வோமே
நம்மை மீட்கும் தேவன் பிறந்தார்

  1. தீர்க்கன் சொன்ன நல் வார்த்தைப் படியே மண்ணில் இயேசு மனுவானார்
    உன்னதத்தில் மா மகிமையே பூமியிலே சமாதானமாமே

பாவம் போக்க சாபம் நீங்க நம்மை தேடி வந்தார்
இருள் அகல ஒளி வீச இறைமகனாய் பிறந்தார்
பாவம் போக்க சாபம் நீங்க நம்மை தேடி வந்தார்
இருள் அகல ஒளி வீச இறைமகனாய் பிறந்தார்

அகமகிழ்வோமே அகமகிழ்வோமே நம்மை மீட்கும் தேவன் பிறந்தார்
அகமகிழ்வோமே அகமகிழ்வோமே நம்மை மீட்கும் தேவன் பிறந்தார்

  1. நள்ளிரவில் விண் தூதர் பாட இரட்சகர் பிறந்தார் புல்லணையில்
    தூதன் சொன்ன நல் செய்தி கேட்டு மந்தை மேய்ப்பர் மகிழ்ந்தனர்

வான் வெள்ளி வழிகாட்ட சாஸ்திரிகளும் தொடர்ந்தார்
பொன் வெள்ளி தூப வர்க்கம் படைத்தங்கே பணிந்தார்
வான் வெள்ளி வழிகாட்ட சாஸ்திரிகளும் தொடர்ந்தார்
பொன் வெள்ளி தூப வர்க்கம் படைத்தங்கே பணிந்தார்

அகமகிழ்வோமே அகமகிழ்வோமே நம்மை மீட்கும் தேவன் பிறந்தார்
அகமகிழ்வோமே அகமகிழ்வோமே நம்மை மீட்கும் தேவன் பிறந்தார்

இம்மானுவேல் இம்மானுவேல்
என்றென்றும் நம்மோடு இருப்பவரே

இம்மானுவேல் இம்மானுவேல்
மண்ணினில் இன்று பிறந்தார்
இம்மானுவேல் இம்மானுவேல்
மண்ணினில் இன்று பிறந்தார்

அகமகிழ்வோமே அகமகிழ்வோமே
நம்மை மீட்கும் தேவன் பிறந்தார்
அகமகிழ்வோமே அகமகிழ்வோமே
நம்மை மீட்கும் தேவன் பிறந்தார்

Tamil Christmas Song Lyrics | Immanuel Immanuel Endrendrum | இம்மானுவேல் இம்மானுவேல் என்றென்றும் | Tamil Christian Songs and Lyrics

0
59
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.