Ivai Yarthu Naatkal | இவை யாரது நாட்கள்

1 minuteread

இவை யாரது நாட்கள்?
ஆவியானவர் நாட்கள்

எப்படி நாட்கள்?
கடைசி நாட்கள்,
கடைசி நாட்கள்! – இவை

  1. அன்பு தணிவது ஆதாரம்
    கோபங்கள், சண்டைகள் ஆதாரம் (2)
    தேசங்கள், ராஜ்யங்கள்
    யுத்தங்கள், நாசங்கள் ஆதாரம் .. (2) – இவை
  2. பாவங்கள் பெருகுதல் ஆதாரம்
    மனக் கடினங்கள் ஆதாரம் (2)
    சோதோம், கொமோராவின்
    நாட்களைக் காணுவதும் ஆதாரம் .. (2) – இவை
  3. இயற்கையின் சீற்றங்கள் ஆதாரம்
    சமுத்திர அலைகளும் ஆதாரம் (2)
    பூகம்பம், புயல்கள்
    புவியெங்கும் தொடருதல் ஆதாரம்.. (2) – இவை
  4. சுவிசேஷ தீவிரம் ஆதாரம்
    சபைகளின் வளர்ச்சிகள் ஆதாரம் (2)
    இயேசுவின் நாமத்தில்
    முழங்கால்கள் முடங்குதல் ஆதாரம் .. (2) – இவை

Dr.N. Emil Jebasingh | Ivai Yarthu Naatkal Lyrics in Tamil | Tamil Christian Song Lyrics

0
92
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.