ஜீவத்தண்ணீரே ஆவியானவரே
வற்றாத நதியாக வாரும் போதகரே
வாருமையா போதகரே – 2
வற்றாத ஜீவ நதியாக – 2
- கணுக்கால் அளவு போதாதையா
முழங்கால் அளவு போதாதையா
நீந்தி நீந்தி மூழ்கணுமே – 2
மிதந்து மிதந்து மகிழணுமே – 2 - போகும் இடமெல்லாம் ஆரோக்கியமே
பாயும் இடமெல்லாம் பரிசுத்தமே – 2
சேருமிடமெல்லாம் ஆறுதலே – 2
செல்லமிடமெல்லாம் செழிப்புதானே – 2 - கோடி கோடி மீனவர் கூட்டம்
ஓடி ஓடி வலை வீசணும் – 2
பாடி பாடி மீன் பிடிக்கணும் – 2
பரலோக தேவனுக்கு ஆள் சேர்க்கணும் – 2 - கரையோர மரங்கள் ஏராளமாய்
கனி தர வேண்டும் தாராளமாய் – 2
இலைகள் எல்லாம் மருந்தாகணும் – 2
கனிகள் எல்லாம் உணவாகணும் – 2
Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 14 | Jeeva Thanneere Aaviyanavare | ஜீவத்தண்ணீரே ஆவியானவரே | Tamil Christian Song Lyrics