Jeeviyamae Orae Jeeviyamae | ஜீவியமே ஒரே ஜீவியமே

1 minuteread

ஜீவியமே ஒரே ஜீவியமே
அண்ட சராசரம் அனைத்திலுமே
மேவி வசிக்கும் மனிதர் அனைத்தும்
பூமியில் வாழ்வது ஒரே தரமே – ஜீவியமே

  1. பிறப்பதும் இறப்பதும் தெய்வச் செயல்
    இடையில் இருப்பது வாழ்க்கையாகும்
    இயேசுவில் சார்வதால் பரிசுத்தம் காணும்
    பரிசுத்தர் ஆட்சியில் சாட்சி கூறும்
    இதைவிடில் முடிவது வீழ்ச்சியாகும் – 2 ஜீவியமே
  2. எண்ணிப்பார் கழிந்திட்டக் காலமதை
    கதையைப்போல் மனிதரின் நாட்கள் செல்லும்
    உலகத்துச் சேவை சாகையில் ஓயும்
    உன்னுடன் மரித்தபின் வருவதாது?
    கிறிஸ்துவின் சேவை நிலைத்து நிற்கும் – 2 ஜீவியமே
  3. அர்ப்பணம் தந்தையே கைஅளித்தேன்
    கல்வி செல்வம் சுகம் பொருள் அனைத்தும்
    செல்லுவேன் சொல்லுவேன் இயேசுவே வழி என
    வாழ்க்கையில் தம்மையே கொண்டு வாழ்வேன்
    என்றுமே அங்கே நான் உம்மில் வாழ்வேன் – 2 ஜீவியமே

Dr.N. Emil Jebasingh | Jeeviyamae Orae Jeeviyamae Lyrics in Tamil | Tamil Christian Song Lyrics

0
108
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.