Kaalaiyum Maalaiyum Evvelaiyum Kartharai – Tamil Christian Lyrics – Sister. Sarah Navaroji
காலையும் மாலையும் எவ்வேளையும் கர்த்தரைக்
கருத்துடன் பாடிடுவேன்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் எனத்தூதர்
பாடிடும் தொனி கேட்குதே
1. கர்த்தர் என் வெளிச்சம் ஜீவனின் பெலனும்
கிருபையாய் இரட்சிப்புமானார்
அஞ்சிடாமல் கலங்காமல் பயமின்றித் திகிலின்றி
அனுதினம் வாழ்ந்திடுவேன் – காலையும்
2. எனக்கெதிராய் ஓர் பாளையமிறங்கி
என்மேல் ஓர் யுத்தம் வந்தாலும்
பயப்படேன்; எதிராளி நிமித்தமாய் செல்வையான
பாதையில் நடத்திடுவார் – காலையும்
3. ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்
என்றும் தம் மகிமையைக் காண
ஜீவனுள்ள நாளெல்லாம் தம் ஆலயத்தில் தங்குவதை
வாஞ்சித்து நாடிடுவேன் – காலையும்
4. தீங்கு நாளில் தம் கூடாரமறைவில்
தேடிச் சேர்த்தென்னை மறைப்பார்
உன்னதத்தில் மறைவாக ஓளித்தென்னைப் பாதுகாத்து
உயர்த்துவார் கன்மலைமேல் காலையும்
5. ௭ந்தன் முகத்தைத் தேடுங்கள் என்று
என் கர்த்தர் சொன்னதினாலே
தம் முகத்தைத் தேடுவேனே; கூப்பிடும் என் சத்தம் கேட்டு
தயவாகப் பதிலளிப்பார் காலையும்
6. தகப்பனும் தாயும் கைவிட்டாலும் என்
கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்வார்
எந்தன் உள்ளம் ஸ்திரமாகத் திடமாகக் கர்த்தருக்கே
என்றென்றும் காத்திருக்கும் – காலையும்
7. எனக்காக யாவும் செய்து முடிப்பார்
என் கர்த்தர் வக்கு மாறிடார்
தமக்கென்றும் பயந்திடும் பக்தர் யாவர் விருப்பமும்
தவறாமல் நிறைவேற்றுவார் – காலையும்
Kaalaiyum Maalaiyum Evvelaiyum Kartharai – Lyrics in English
Kaalaiyum Maalaiyum Evvelaiyum Kartharai
Karuththudan Paadiduven – (2)
Parisuthar Parisuthar Parisuthar Parisuthar
Enathoothar Paadidum Thoni Ketkuthe – (2) – Kaalaiyum
1. Karthar En Velicham Jeevanin Belanum
Kirubaiyaai Retchippumaanaar – (2)
Anjidaamal Kalangaamal Payamindri Thigilindri
Anudhinam Vaazhnthiduven – (2)
2. Enakkethiraai Oar Palaiyamirangi
En Mel Oar Yutham Vandhaalum – (2)
Payappaden Ethiraali Nimiththamaai
Sevaiyaana Paadhayil Nadaththiduvaar – (2)
3. Ondrai Naan Ketten Athaiye Naaduven
Endrum Tham Magimaiyai Kaana – (2)
Jeevanulla Naalellaam Tham Aalayathil Thanguvathai
Vaanchiththu Naadiduven – (2)
4. Theengu Naalil Tham Koodaara Maraivil
Thedi Serththennai Maraippaar – (2)
Unnathaththil Marivaaga Olithennai Padhukaathu
Uyarththuvaar Kanmalaimel – (2)
5. Endhan Mugathai Thedungal Endru
En Karthar Sonnathinaale – (2)
Tham Mugathai Theduvene Kuppidum En Satham Kettu
Thayavaaga Padhilalippaar – (2)
6.Thagappanum Thaayum Kaivitaalum
En Karthar Ennai Serthukkolvaar – (2)
Enthan Ullam Sthiramaaga Thidamaaga Kartharukke
Endredrum Kaathirukkum – (2)
7. Enakkaaga Yaavum Seithu Mudippaar
En Karthar Vaakku Maaridaar – (2)
Thamakkendrum Bayanthidum Bakthar Yaavar Viruppamum
Thavaraamal Niraivetruvaar – (2)