Kalangathe Kalangathe Karthar | கலங்காதே கலங்காதே கர்த்தர்

1 minuteread

கலங்காதே கலங்காதே
கர்த்தர் உன்னை கைவிடமாட்டார்

  1. முள்முடி உனக்காக
    இரத்தமெல்லாம் உனக்காக
    பாவங்களை அறிக்கையிடு
    பரிசுத்தமாகிவிடு – நீ
  2. கல்வாரி மலைமேலே
    காயப்பட்ட இயேசுவைப் பார்
    கரம் விரித்து அழைக்கின்றார்
    கண்ணீரோடு ஓடி வா – நீ
  3. காலமெல்லாம் உடனிருந்து
    கரம்பிடித்து நடத்திச் செல்வார்
    கண்ணீரெல்லாம் துடைப்பார்
    கண்மணி போல் காத்திடுவார்
  4. உலகத்தின் வெளிச்சம்
    நீ எழுந்து ஒளி வீசு
    மலைமேல் உள்ள பட்டணம்
    நீ மறைவாக இருக்காதே
  5. உன் நோய்கள் சுமந்து கொண்டார்
    உன் பிணிகள் ஏற்றுக்கொண்டார்
    நீ சுமக்கத் தேவையில்லை
    விசுவாசி அது போதும்
  6. உலகம் உன்னை வெறுத்திடலாம்
    உற்றார் உன்னைத் துரத்திடலாம்
    உன்னை அழைத்தவரோ
    உள்ளங்கையில் ஏந்திடுவார்

Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 2 | Kalangathe Kalangathe Karthar | கலங்காதே கலங்காதே கர்த்தர் | Tamil Christian Song Lyrics

0
85
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.