Karthanai Vazhththukiren Avar | கர்த்தனை வாழ்த்துகிறேன் அவர்

1 minuteread

Karthanai Vazhththukiren Avar Kirubaigal Ennidam Thanga Lyrics in Tamil – Tamil New Year Christian Songs

கர்த்தனை வாழ்த்துகிறேன்‌ அவர்‌
கிருபைகள்‌ என்னிடம்‌ தங்க

நன்மை நிறைந்த ஆண்டிதுவே
நன்றியும்‌ பொங்கப்பாடிடுவேன்‌ – கர்த்தனை

1.சுற்றிலும்‌ ஸ்தோத்திரத்‌ தொனி கேட்கும்‌
வெற்றியின்‌ சாட்சி கூறிடுவேன்‌
இத்தனை ஆண்டுகள்‌ ஜெயம்‌ அளித்தார்‌
எத்தனை நாவால்‌ போற்றிடுவேன்‌ – கர்த்தனை

2.ஆண்டுகள்தோறும்‌ வாக்குத்தத்தம்‌
ஆண்டவர்‌ அன்பாய்‌ ஈந்திடுவார்‌
கர்த்தரை நம்பியேத்‌ திடமனதாய்க்‌
கடந்திடுவேன்‌ இவ்வாண்டினையும்‌ – கர்த்தனை

3.யூபிலி ஆண்டு விடுதலையே
இயேசுவின்‌ ஆவி வந்திறங்க
கட்டுகள்‌ யாவும்‌ அகன்றிடவே
கலப்பையின்மேல்‌ கை சேவிக்குதே – கர்த்தனை

4.ஓர் புதுப்பாதை தோன்றிடுதே
ஓங்கும்‌ தம்‌ கைகள்‌ தாங்கிடுமே
கர்த்தரிடம்‌ என்‌ உடன்படிக்கை
காத்துக்கொள்வேன்‌ அந்நாள்வரையும்‌ – கர்த்தனை

5.சீக்கிரம்‌ இயேசு வந்திடுவார்‌
சேர்ந்திடுவேன்‌ நான்‌ சீயோனிலே
சீரழியும்‌ இந்த மண்ணுலகம்‌
சீர் புகழ்‌ ஓங்கும்‌ விண்ணுலகம்‌ – கர்த்தனை

New Year Christian Tamil Songs | Tamil Christian Birthday Songs | Karthanai Vazhththukiren Avar | கர்த்தனை வாழ்த்துகிறேன் அவர் | Tamil Christian Songs and Lyrics

0
51
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.