Karthanai Vazhthugiren | கர்த்தனை வாழ்த்துகிறேன்

1 minuteread

Karthanai Vazhthugiren Avar Kirubaigal Lyrics in Tamil – New Year Tamil Christian SongsSister. Sarah Navaroji Songs

கர்த்தனை வாழ்த்துகிறேன் – அவர்
கிருபைகள் என்னிடம் தங்க
நன்மை நிறைந்த ஆண்டிதுவே
நன்றியும் பொங்க பாடிடுவேன்

1. சுற்றிலும் ஸ்தோத்திர தொனி கேட்கும்
வெற்றியின் சாட்சி கூறிடுவேன்
இத்தனை ஆண்டுகள் ஜெயம் அளித்தார்
எத்தனை நாவால் போற்றிடுவேன் – கர்த்தனை

2. ஆண்டுகள் தோறும் வாக்குத்தத்தம்
ஆண்டவர் அன்பாய் ஈந்திடுவார்
கர்த்தரை நம்பியே திடமனதாய்
கடந்திடுவேன் இவ்வாண்டினையும் – கர்த்தனை

3. யூபிலி ஆண்டு விடுதலையே
இயேசுவின் ஆவி வந்திரங்க
கட்டுகள் யாவும் அகன்றனவே
கலப்பையின் மேல் கை சேவிக்குதே – கர்த்தனை

4. ஓர் புதுப் பாதை தோன்றிடுதே
ஓங்கும் தம் கைகள் தாங்கிடுதே
கர்த்தரிடம் என் உடன்படிக்கை
காத்துக் கொள்வேன் அந்நாள் வரையும் – கர்த்தனை

5. சீக்கிரம் இயேசு வந்திடுவார்
சேர்ந்திடுவேன் நான் சீயோனிலே
சீரழியும் இந்த மண்ணுலகம்
சீர் புகழ் ஓங்கும் விண்ணுலகம் – கர்த்தனை

Lyric & Tune by: Sister Sarah Navaroji | New Year Tamil Christian Songs | Tamil Christian Birthday Songs | Karthanai Vazhthugiren | கர்த்தனை வாழ்த்துகிறேன் | Tamil Christian Songs and Lyrics

    0
    44
    1 minuteread
    Submit

      Type your search string. Minimum 4 characters are required.