Karthane Em Thunaiyaaneer | கர்த்தனே எம் துணையானீர்

1 minuteread

கர்த்தனே எம் துணையானீர்
நித்தமும் எம் நிழலானீர்
கர்த்தனே எம் துணையானீர்

  1. எத்தனை இடர் வந்து சேர்ந்தாலும்
    கர்த்தனே அடைக்கலமாயினார் (2)
    மனு மக்களில் இவர் போலுண்டோ
    விண் உலகிலும் இவர் சிறந்தவர் – கர்த்தனே
  2. பாவி என்றெனைப் பலர் தள்ளினார்
    ஆவி இல்லை என்றிகழ்ந்தும் விட்டார் (2)
    ராஜா உம் அன்பு எனைக் கண்டது
    உம்மைப்போல் ஐயா எங்கும் கண்டதில்லை – கர்த்தனே
  3. சுற்றத்தாரும் காலத்தில் குளிர்ந்திட்டார்
    நம்பினோரும் எதிராக வந்திட்டார் (2)
    கொள்கை கூறியே பலர் பிரிந்திட்டார்
    ஐயா உம்மைப்போல் நான் எங்கும் கண்டதில்லை -கர்த்தனே
  4. ஆயிரம் நாவுகள் நீர் தந்தாலும்
    ராஜனே உம்மைப் பாடக் கூடுமோ? (2)
    ஜீவனை உமக்களிக்கின்றேனே
    உம்மைப்போல் ஐயா எங்கும் கண்டதில்லை – கர்த்தனே

Dr.N. Emil Jebasingh | Karthane Em Thunaiyaaneer Lyrics in Tamil | Tamil Christian Song Lyrics

0
107
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.