கர்த்தரை நம்பினோர் பேறு பெற்றோர்
சீயோன் மலைபோல் உறுதியுடன்
அசையாமல் இருப்பார்கள்
- எருசலேம் நகரம் மலைகளால்
எப்போதும் சூழ்ந்து இருப்பதுபோல்
இப்போதும் எப்போதும் கர்த்தர் நம்மை
சூழ்ந்து சூழ்ந்து காத்திடுவார் - வாய்க்கால்கள் ஓரத்தில் நடப்பட்டு
கனிதரும் மரமாய் வளர்வார்கள்
கோடை காலத்தில் பயமில்லை
வறட்சி வந்தாலும் கவலையில்லை - மனைவி கனிதரும் திராட்சைச் செடி
பிள்ளைகள் ஒலிவக் கன்றுகள் போல்
இல்லத்தில் மகிழ்ந்து வாழ்வார்கள்
இடைவிடாமல் ஜெபிப்பார்கள் - கர்த்தரை நேசித்து அவர் வழியில்
நடக்கும் மனிதர் பேறுபெற்றோர்
உழைப்பின் பயனை உண்பார்கள்
நன்மையும் நலமும் பெறுவார்கள்
Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 16 | Kartharai Nambinor Peru | கர்த்தரை நம்பினோர் பேறு | Tamil Christian Song Lyrics