Karthavin Janamae Kaithalamudanae | கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே

1 minuteread
  • Home
  • /
  • Knowledgebase
  • /
  • Karthavin Janamae Kaithalamudanae | கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே
  1. கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே
    களிகூர்ந்து கீதம் பாடு
    சாலேமின் ராஜா நம் சொந்தமானார்
    சங்கீதம் பாடி ஆடு, அல்லேலூயா, அல்லேலூயா
  2. பாவத்தின் சுமையகற்றி கொடும்
    பாதாள வழி வலக்கி
    பரிவாக நம்மை கரம் நீட்டி காத்த
    பரிசுத்த தேவன் அவரே, அல்லேலுயா
  3. நீதியின் பாதையிலே அவர்
    நிதம் நம்மை நடத்துகின்றார்
    எது வந்த போதும் மாறாத இன்ப
    புது வாழ்வைத் தருகின்றாறே, அல்லேலுயா
  4. வறுமையின் வாழ்வினிலே – இயேசு
    மன்னவன் பாதத்திலே
    பசி தாகமின்றி துதி கானம் பாடி
    பரனோடு நிதம் வாழுவோம், அல்லேலுயா
0
7
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.