கிறிஸ்துவின் அடைக்கலத்தில்
சிலுவையின் மாநிழலில்
கன்மலை வெடிப்பதனில்
புகலிடம் கண்டு கொண்டோம் – (2)
- இரட்சிப்பின் கீதங்களும்
மகிழ்ச்சியின் சப்தங்களும்
கார்மேக இருட்டினில்
தீபமாய் இலங்கிடும்
கர்த்தரால் இசை வளரும் – (2) – நாம் கிறிஸ்துவின் - தேவனின் இராஜ்ஜியத்தை
திசை எங்கும் விரிவாக்கிடும்
ஆசையில் ஜெபித்திடும்
அதற்கென்றே வாழ்ந்திடும்
யாருக்கும் கலக்கம் இல்லை – (2) – நாம் கிறிஸ்துவின் - பொல்லோனின் பொறாமைகளும்
மறைவான சதி பலவும்
வல்லோனின் கரத்தினில்
வரைபடமாயுள்ள
யாரையும் அணுகாது – (2) – நாம் கிறிஸ்துவின்
Dr.N. Emil Jebasingh | Kiristhuvin Adaikalathil Siluvaiyin Lyrics in Tamil | Tamil Christian Song Lyrics