Kirubaiyaaai Namai Nadathiya | கிருபையாய்‌ நம்மை நடத்திய

1 minuteread

Kirubaiyaaai Namai Nadathiya Dhevanai Lyrics in Tamil – Tamil Christian New Year Songs

கிருபையாய்‌ நம்மை நடத்திய தேவனை
நன்றியால்‌ ஸ்தோத்தரிப்போம்‌
அருமையாய்‌ நம்மை அவனியில்‌ காத்த
ஆண்டவரை துதிப்போம்‌ ,

1. நாளொன்றை கடந்தோம்‌ அவரது பெலத்தால்‌
ஆர்ப்பரித்தே மகிழ்வோம்‌
புதிதொரு நாளினை கண்டிட செய்த
கர்த்தரை ஸ்தோத்தரிப்போம்‌ – கிரு

2. புதிய நல்‌ நாளினில்‌ புதிய நல்‌ கிருபை
பொழிந்திடுவாரே அவர்‌
வருஷத்தை நன்மையால்‌ முடி சூட்டிடும்‌
வல்ல கர்த்தரை ஸ்தோத்தரிப்போம்‌ – கிரு

3. பழையன யாவும்‌ மறந்திடுவோம்‌ நாம்‌
கர்த்தரில்‌ மகிழ்ந்திடுவோம்‌
பூர்வனவற்றை சிந்தியாமல்‌ நம்‌
தேவனை ஸ்தோத்தரிப்போம்‌ – கிரு

4. ஆண்டுகள்‌ முழுவதும்‌ நன்மையும்‌ கிருபையும்‌
தொடர்ந்திட செய்திடுவார்‌
நல்‌ மேய்ச்சல்‌ தந்து நடத்திடும்‌
நல்ல மேய்ப்பனை ஸ்தோத்தரிப்போம்‌ – கிரு

5. உன்னத பெலத்தால் அனுதினமும்‌ நம்மை
நிரப்பிடுவாரே அவர்
நினைப்பதில் அதிக நன்மைகள் வழங்கிடும்
இயேசுவே ஸ்தோத்தரிப்போம்‌ – கிரு

New Year Christian Tamil Songs | Tamil Christian Birthday Songs | Kirubaiyaaai Namai Nadathiya Dhevanai | கிருபையாய்‌ நம்மை நடத்திய தேவனை | Tamil Christian Songs and Lyrics

0
45
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.