மகிமை உமக்கன்றோ
மாட்சிமை உமக்கன்றோ
துதியும் புகழும் ஸ்தோத்திரமும்
தூயவர் உமக்கன்றோ
ஆராதனை ஆராதனை – என்
அன்பர் இயேசுவுக்கே
- விலையேறப் பெற்ற உம் இரத்தத்தால்
விடுதலை கொடுத்தீர்
இராஜாக்களாக லேவியராக
உமக்கென தெரிந்து கொண்டீர் - வழிகாட்டும் தீபம் துணையாளரே
தேற்றும் தெய்வமே
அன்பால் பெலத்தால்
அனல்மூட்டும் ஐயா அபிஷேக நாதரே - எப்போதும் இருக்கின்ற
இனிமேலும் வருகின்ற எங்கள் ராஜாவே
உம் நாமம் வாழ்க உம் அரசு வருக
உம் சித்தம் நிறைவேறுக - உம் வல்ல செயல்கள்
மிகவும் பெரிய அதிசயமன்றோ
உம் தூய வழிகள் நேர்மையான
சத்திய தீபமன்றோ
Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 4 | Magimai Umakkandro Matchimai | மகிமை உமக்கன்றோ மாட்சிமை | Tamil Christian Song Lyrics