Mannava Umai Thuthikiraen En Naalilum Christian Lyrics in Tamil
மன்னவா உம்மை துதிக்கிறேன் எந்நாளிலும்
மன்னவா உம்மை துதிக்கின்றேன் -2
மாட்சிமையும் வல்லமையும்
மகிமையும் ஜெயமும் உம்முடையதே -2
(1)
பதினாயிரங்களில் சிறந்தவர் நீர்தானே
பரிசுத்தம் என்பது உமது பெயர்தானே -2
சாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின் லீலியே-2
மருதோன்றி பூங்கொத்தே வாசம் உள்ளவரே
மாறாத மதுரமே மகத்துவமானவரே
(2)
ஜெயபலமானவரே ஜெயத்தை தருபவரே
ஜெகத்தின் இரட்சகரே ஜெயம்
எனக்கு அளிப்பவரே -2
யுத்தத்தில் வல்லவரே சத்துருவை அழித்தவரே -2
சர்வ வல்லவரே சாவாமை உள்ளவரே
சர்வத்தையும் ஆளுகின்ற சகாயர் நீர்தானே
(3)
பரலோகம் அழைத்துச் செல்ல வருகின்ற ராஜாவே
உம்மோடு மகிழ்ந்திடவே
அனுகிரஹம் புரிந்தவரே -2
உமது வருகையிலே நாங்களும்
இணைந்திடவே -2
ஆயத்தமாகிடுவோம் உம்மை துதித்திடவே
மகிமை அடைந்திடுவோம் மறுரூபம் பெற்றிடவோம்
Album: Thuniayalare | Pastor.Reegan Dhanasekar Songs and Lyrics in Tamil | Mannava Umai Thuthikiraen En Naalilum | மன்னவா உம்மை துதிக்கிறேன் எந்நாளிலும் | Tamil Christian Songs and Lyrics
- tamilchristianlyric@gmail.com
- +91 9884002619