Mannin Mazhayaai Arumai Kumaran – Tamil Christmas Songs and Lyrics
மண்ணின் மழையாய் அருமை குமாரன்
தரணியில் அவதரித்தார்
புதுயுக உதயம் வருவதினாலே
மனுடன் உதித்துயர்ந்தார்
பாடுவோம் பாடுவோம் ஒன்றாய் பாடிடுவோம்
இயேசு ராஜாவின் ஜனனம் கொண்டாடிடுவோம்
- சூரிய பிரகாசம் பூமியின் மேலே
ஒளி மயமாகி நிறைவேறும் போல்
சத்ய வெளிச்சம் பகருவதற்காய்
வந்தவராம் ஒரு தேவசுதன் — பாடுவோம் - தாவரம் விலங்குகள் வளருவதற்காய்
மழையும் வெயிலும் ஒருசமமாய்
மானிடர் யாவும் ஒன்றாய் சேர்ந்த
பூலோகத்தின் சொந்த பாலகராய் — பாடுவோம் - மனிதனின் மனசின் இருள் ஒழித்திட
கடுமையாம் பாவம் போக்கிடவே
மனிதனின் ரூபம் எடுத்ததனாதன்
லோகத்தின் ஜெனித்த சமயமிதாம் — பாடுவோம்