Mesiyavae Mesiyavae Poologam – Tamil Christmas Song Lyrics
மேசியாவே மேசியாவே
பூலோகம் வந்தீரே
நாங்களுந்தான் பாடணும்
நாங்களுந்தான் ஆடணும்
உம்முடைய பிறப்பைக் கொண்டாடணும்
- பெத்தலகேம் என்னும் ஊரினிலே
இரட்சகர் மனுவாக மலர்ந்ததாலே
வானவர்கள் வாழ்த்திடவே
வையகமும் மகிழ்ந்திடவே
கொண்டாட்டம் கொண்டாட்டம்
கொண்டாட்டமே
Happy Christmas
Merry Christmas
Happy Christmas — மேசியாவே
- பூலோக மாந்தர்க்கு நற்செய்தியே
சந்தோஷம் சமாதானம் பெருகிடவே
கந்தைத்துணி முன்னணையில்
இறைமைந்தன் உறங்கிடவே
அன்னை மரி தாலாட்டி மகிழ்ந்தாளே
Happy Christmas
Merry Christmas
Happy Christmas — மேசியாவே
- மன்னிப்பில் மாட்சிமை உண்டெனவே
உரைத்திட்ட திரு மைந்தன் பிறந்ததாலே
எண்ணில்லா நன்மைகள்
என்றென்றும் கிடைத்திடவே
மன்னிப்போம் மகிழ்வோடு தவறுகளை
Happy Christmas
Merry Christmas
Happy Christmas — மேசியாவே
Album : Athisayam Vol 4 | Lyrics – Prince | Tamil Christmas Song Lyrics in Tamil | Mesiyavae Mesiyavae Poologam | மேசியாவே மேசியாவே பூலோகம் | Tamil Christian Songs and Lyrics