Motcha Yaaththirai Selkinrom | மோட்ச யாத்திரை செல்கின்றோம்

1 minuteread
  1. மோட்ச யாத்திரை செல்கின்றோம் மேலோகவாசிகள் – இம்
    மாய லோகம் தாண்டியே எம் வீடு தோன்றுதே
    கடந்து செல்கின்றோம் கரையின் ஓரமே
    காத்திருந்த ராஜ்ஜியம் கண்டடைவோம்

ஆனந்தமே ஆ ஆனந்தமே
ஆண்டவருடன் நாம் என்றும் ஆளுவோம்
ஆதி முற்பிதாக்களோடு தூதருமாய்
ஆர்ப்பரிப்புடன் கூடி வாழுவோம்

  1. சத்திய சுவிசேஷம் எடுத்துரைத்துமே – தம்
    நித்திய இராஜ்ஜியம் மக்களை ஆயத்தமாக்கவே
    தேசமெங்குமே அலைந்து செல்கிறோம்
    நேசர் இயேசு வாக்குரைகள் நம்பியே — ஆனந்தமே
  2. அள்ளித் தூவிடும்விதை சுமந்து செல்கின்றோம் தம்
    அண்ணல் இயேசுவின் சமூகம் முன்னே செல்லுதே
    கண்ணீர் யாவுமே கடைசி நாளிலே
    கர்த்தரே துடைத்து எம்மைத் தேற்றுவார் — ஆனந்தமே
  3. கர்த்தர் எம் அடைக்கலம் கவலை இல்லையே – இக்
    கட்டு துன்ப நேரமோ கலக்கமில்லையே
    கஷ்டம் நீக்குவார் கவலை போக்குவார்
    கைவிடாமல் நித்தமும் நடத்துவார் — ஆனந்தமே

Sister. Sarah Navaroji | Motcha Yaaththirai Selkinrom | மோட்ச யாத்திரை செல்கின்றோம் | Tamil Christian Song Lyrics | Sarah Navaroji Tamil Christian Song Lyrics

0
60
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.