முத்திரை முத்திரை ஏழு முத்திரை
இவைகளை திறப்பது யாரது
இயேசு கிறிஸ்து தானது
- வெள்ளை குதிரையில் ஒருவன்
அந்தி கிறிஸ்து அவன்
ஜெயிக்க வரும் ஒருவன்
ஜனங்களை வஞ்சிப்பவன்
போலியாய் பலர் வந்துபோவார்
எச்சரிக்கை வேண்டும்
வேதம் சொல்வதை நன்கு அறிய வேண்டும்
இது முத்திரை முதல் முத்திரை
- சிவப்பு குதிரையில் ஒருவன்
அதிகாரம் கொண்டவன்
பட்டயம் கையில் கொண்டவன்
பலரை கொல்லும் ஒருவன்
யுத்த செய்திகள் கேட்கும்போது
எச்சரிக்கை வேண்டும்
இவைகளெல்லாம் சம்பவிக்க வேண்டும்
இந்த முத்திரை இரண்டாவது
- கறுப்பு குதிரையில் சவாரி
செய்து ஒருவன் வருகின்றான்
தராசை கையில் ஏந்திக்கொண்டு
அவனே வருகின்றான்
பூமி எங்கும் பஞ்சம் உண்டாகும்
பட்டினியாலே துன்பம் உண்டாகும்
இந்த முத்திரை மூன்றாவது
- நாலாம் முத்திரை உடைத்தபோது
மங்கின நிறமுள்ள குதிரை
மரணம் என்பது அவனது நாமம்
மேற்கொள்ளுமே பலரை
பஞ்சத்தாலும், போரினாலும்,
பூமி அதிர்ந்ததாலும்,
கொள்ளை நோயின் பிடியினாலும்
மரணம் மேற்கொள்ளும்
மனிதனை மரணம் மேற்கொள்ளும்
முத்திரை முத்திரை ஏழு முத்திரை
- ஐந்தாம் முத்திரை உடைத்தபோது
பலிபீடத்தின் கீழே
ரத்த சாட்சியாய் மாண்ட மாந்தரின்
விண்ணப்பம் சென்றது மேலே
தேவனை தொழுதிடும் ஆத்துமாக்களை
உலகம் பகைத்திடும்
கர்த்தரே தேவன் என்று போற்றினால்
கொலையும் செய்திடும்
- ஆறாம் முத்திரை உடைத்தபோது
பூமியும் அதிர்ந்ததே
சூரியன் கறுத்து சந்திரன் சிவந்து
விண்மீண் விழுந்ததே
மனுஷ குமாரனின் அடையாளங்கள்
விண்ணில் தெரியுது பார்
மன்னாதி மன்னன் வருவதை பார்த்து
மனிதர் புலம்பிடுவார்
பூமியின் மனிதர் புலம்பிடுவார்
- இறுதி முத்திரை உடைந்தது
பரலோகில் அமைதி நிலவியது
பூமியின் நியாயத்தீர்ப்புக்காய்
ஆயத்தமாகும் ஒரு அமைதியது
Aayathamaa Vol-2 | Ravi Bharath | Muthirai Muthirai Yezhu Muthirai Lyrics In Tamil