Naan Manum Kupai Kandhaiyum Ondrukum Uthavaathirunthaen Christian Lyrics in Tamil
நான் மண்ணும் குப்பை கந்தையும்
ஒன்றுக்கும் உதவாதிருந்தேன் -2
நீர் வாரும் இயேசுவே வாரும்
என் வாழ்க்கை புதிதாக மாறும் -2
(1)
பெயரிட்டு அழகு பார்த்தீரே என்னை
உம் பணி செய்திட தெரிந்து கொண்டீரே -2
உதவாதவன் என்று உலகம் பகைத்தது
அன்போடு சேர்த்து என்னை
அணைத்துக் கொண்டீரே -2
(2)
கரத்தைப் பிடித்துக் கொண்டீரே என்னை
ஊழியனாய் உலகினிலே மாற்றி வைத்தீரே-2
ஞானத்தில் குறைவாக காணப்பட்டாலும்
தேவா உம் கிருபையை பொழிந்துவிட்டீரே -2
(3)
கருவினில் பிரித்தெடுத்தீரே எனக்கு
உம்மைப் பாடும் துதிகளை
என் நாவில் வைத்தீரே -2
தாய் தந்தை வெறுத்து
என்னை ஒதுக்கிவிட்டார்கள்
வெறுக்காமல் சேர்த்துக் கொண்ட
என் இயேசுவே -2
Album: Thuniayalare | Pastor.Reegan Dhanasekar Songs and Lyrics in Tamil | Naan Manum Kupai Kandhaiyum | நான் மண்ணும் குப்பை கந்தையும் | Tamil Christian Songs and Lyrics